
Idhayakkani songs and lyrics
Top Ten Lyrics
Neenga nallaa irukkOnum Lyrics
Writer :
Singer :
ஆ தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தங்கியிடம் உருவாகி
பெ வண்ணம்பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்டக்
கண்ணம்பாடி அணை கடந்து நலம்பாடி
ஆ ஏர் வீழ்ச்சி காணாமல் இழிக்கச் சிவசமுத்திர
நீர் விழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
பெ வீடுதாண்டா கற்வு விளங்கும் தமிழ் மகள் போல்
ஆறுதாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய் பின் தவழ்ந்து
ஆ கரிகாலன் பேர்வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
தனிக் கருணைக் காவிரி போல்
பெ செல்லும் இடமெல்லாம் சீர் பெருகிப் பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
ஆ பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
இரு எங்கள் இதயக்கனி இதயக்கனி
பெ நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..... இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற (நீங்க)
ஆ என்றும் நல்லவங்க எலலோரும் உங்க பின்னாலே நீங்க
நெச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே (நீங்க)
ஆ உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்ற சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாடுங்கள் - அண்ணா
சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் (நீங்க)
பெ பாடுபட்டுச் சேர்த்த பொருளை கொடுக்கும் போதும் இன்பம்
வாழும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
ஆ பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை (நீங்க)
ஆ காற்றும் நீரும் காணும் நெருப்பும்
பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
ஆ பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒரும வந்தால் அமைதி நிலவுமே
ஆ நதியைப் போல நாமும் நடந்து பயன் தரவேண்டும்
கடலைப் போல விரிந்த இதயம் இருந்திடவேண்டும்
ஆ வானம் போலப் பிறருக்காக அழுதிடவேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும் (நீங்க)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.