Top Ten Lyrics
Kungumam Pirandhadhu Maraththilaa Lyrics
Writer :
Singer :
குங்குமம் பிறந்தது மரத்திலா - இல்லை
குமரிப் பெண்ணின் உதட்டிலா
சந்திரன் மலர்வது விண்ணிலா - இல்லை
அன்புள்ள ஆடவன் கண்ணிலா
இனிமை பிறப்பது கனியிலா - ஒரு
ஏந்திழை மொழியின் கனிவிலா
குளுமை கிடைப்பது பனியிலா - இளம்
குமரன் ஒருவன் துணையிலா
(குங்குமம்)
இசையும் பிறந்தது காற்றிலா - இரு
இதயம் விடுகின்ற மூச்சிலா
அசைவு பிறந்தது கொடியிலா - இல்லை
அழகி ஒருத்தியின் இடையிலா
(குங்குமம்)
அகமும் முகமும் மலர்வதேன் - புது
ஆனந்தம் நினைவில் வளர்வதேன்
அலையும் கரையைத் தொடுவதேன் - அதை
அணைந்தே தாளம் போடுவதேன்
(குங்குமம்)
kungkumam piRanthadhu maraththilA - illai
kumarip peNNin udhattilA
santhiran malarvadhu viNNilA - illai
anbuLLa Adavan kaNNilA
inimai piRappadhu kaniyilA - oru
Enthizai moziyin kanivilA
guLumai kidaippadhu paniyilA - iLam
kumaran oruvan thuNaiyilA
(kunggumam)
isaiyum piRanthadhu kARRilA - iru
idhayam viduginRa mUssilA
asaivu piRanthadhu kodiyilA - illai
azagi oruththiyin idaiyilA
(kungkumam)
agamum mugamum malarvadhEn - pudhu
Anantham ninaivil vaLarvadhEn
alaiyum karaiyaith thoduvadhEn - adhai
aNainthE thALam pOduvadhEn
(kungkumam)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.