Malaigal Idam Maruthu Lyrics

Writer :

Singer :





ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும்
மங்கலம் மங்கலம் மங்கலம் ம் ம் ம்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே
நெஞ்சிலே தாலாட்டும் நெடு நாள் ஆசை
இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடு நாள் ஆசை
இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை

தொட்டுவிட்டு போகாமல் தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல் தோளோடு மோதல்

தாகங்கள் வரும் மோகங்கள் இனி தத்தளிக்கும்

ம் ம் ம் ம்
தேகங்கள் தரும் வேகங்கள் வெள்ளி முத்தெடுக்கும்

ம் ம் ம் ம்
தந்த சுகம் கண்ட மனம் சந்தம் படித்திடும் சொந்தம் இனித்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே

மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே

தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன

கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளில்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளில்

கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடி காலைக் கூடும்

ஆரங்கள் பரிவாரங்கள் பல அற்புதங்கள்

ம் ம் ம்
எண்ணங்கள் பல வண்ணங்கள் எழில் சித்திரங்கள்

ம் ம் ம் ம்
இன்று முதல் இன்னிசைகள்
இன்று பிறந்திடும் எங்கும் பறந்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும்
மங்கலம் மங்கலம் மங்கலம் ம் ம் ம்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே

திரைப்படம்: டிசம்பர் பூக்கள் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJY, சித்ரா
நடிப்பு: மோகன், ரேவதி

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.